கடந்த 29.12.2012 அன்று யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் தேசத்தின் குரல்
அன்டன் பாலசிங்கம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு நிகழ்வு
நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், உறவுகள் அனைவரும்
தேசத்தின் குரல் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர், சுடர் வணக்கம்
செலுத்தினர். செந்தளிர் இசைக்குழுவின் இசைவணக்கம், இளையவர்களின் நடனங்கள்
ஆகியனவற்றோடு ஆரம்பித்த நிகழ்வில், தேசத்தின் குரல் அவர்களின் உரை, அவர்
தமிழீழத்திற்காய் ஆற்றிய பணி ஆகியன அடங்கிய ஒளிப்படத் தொகுப்பு
காட்சியிடப்பட்டது.
தொடர்ந்து தாயக நலன் காப்புப் பிரிவின் யேர்மனிக்கிளையின் பொறுப்பாளர் சுவீட்சன் அவர்கள் கருத்துரை இடம்பெற்றது. சுனாமி ஆழிப்பேரலை காரணமாக ஆரம்பித்த இடர்நிலை, தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வழியாக எமது மக்களின் பின்தங்கிய வாழ்வு, ஆகியன பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளில் எமது மக்களின் ஒத்துழைப்பு, இளையவர்கள் எமது மக்களின் வாழ்விற்காக ஆற்ற வேண்டிய பணி குறித்தும் தனது உரையில் குறித்துரைத்தார் . நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதுடன், தாரக மந்திரம் ஒலிக்க, நிகழ்வு இரவு 21.00 மணியளவில் நிறைவுற்றது.

0 Responses to யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு நிகழ்வு! (படங்கள் இணைப்பு)