Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவாழ் தமிழ் இளையோரின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொண்டு வரும் முகமாகவும் வளர்ந்து வரும் இளையோரை ஊக்குவிக்கும் முகமாகவும் கனடிய தமிழ் இளையோர் ஒன்றியம்  TOP TALENTS என்னும் விருது விழாவை ஞாயிறு, டிசம்பர் 30, அன்று  Claireport Banquet Hall and Convention Centre  இல் பிற்பகல் 5:00 மணிக்கு ஒழுங்கமைத்தது.

இவ்விழாவிலே பல துறைகளிலும் திறமை வாய்ந்த இளையோர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து இளையோருமே மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பினும் சிறப்பாக உருவாக்கப்பட்ட வழிமுறையின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களின் விபரங்களை கீழே காணலாம்:

பரதநாட்டிய விருது (Classical Dance)
வெற்றியாளர்: யாழினி இராஜகுலசிங்கம்

ஓவியக் கலை விருது (ஏளைரயட யுசவள)
வெற்றியாளர்: சௌமியா சந்திரபாலன்

பொறியியல் விருது   (Engineering)
வெற்றியாளர்: அரவிந்தன் அகிலேசுவரன்

தமிழ் மொழித்திறன் விருது (Tamil Language)
வெற்றியாளர்: சகானா தங்கராஜா

காற்பந்தாட்டத்துறை விருது (Soccer)
வெற்றியாளர்: அபிராம் பாலசிங்கம்

இளைய தொழில் அதிபர் விருது (Young Entrepreneur)

வெற்றியாளர்:  Ahenam Technologies

இளைய தொண்டர் விருது (Youth Volunteer)

வெற்றியாளர்: சேந்தன் திருஞானசம்பந்தன்

வேறுபட்ட சிறப்புத் துறை (Special Category)
வெற்றியாளர்: ஜெசிந்தன் ஜெயந்திரன்(Fusion Dance)

இவ்விழாவிலேQueen's Diamond Jubilee விருது கிருஸ்னா சரவனமுத்திற்கு, ஒன்டாரியோ மாகாண சபை உறுப்பினர் க்லென் முர்ரே (Glenn Murray)அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விருது கனடா நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கோ அல்லது சமூகத்திற்கோ சிறந்த தொண்டாற்றிய ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு விருது ஆகும். அது ஒரு தமிழ் இளையவருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஒன்டாரியோ மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு மற்றும் நூதனத்துறை அமைச்சர் ப்ராட் டுகுஇட்(Brad Duguid)அவர்களும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்களது நடன நிகழ்வுகள் உட்பட பல கலை நிகழ்வுகளுடனும் இராப்போசன விருதுடனும் இவ்விழா இனிதே நிறைவேறியது. இந்நிகழ்வில் பங்குபற்றி இளையோரின் திறமைகளை ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தனது அன்பைத் தெரிவித்துக்கொள்கின்றது.

0 Responses to கனடாவில் இளையோருக்கான விருது விழா (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com