6 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரப்படுத்தி படுகொலை செய்துவிட்டு,
சிறுவர் சீர் திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்க முனையும் பருவ
வயதினர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட குறைந்த பட்ச தண்டனையை எதிர்த்து டெல்லி
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரப்படுத்திய பின்னர் துண்டு துண்டாக வெட்டி பொதுக்கழிப்பறையில், குற்றவாளி வீசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. எனினும் கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கையில் சிறுவர் சீர் திருத்த சட்டத்தின் படி மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட கூடிய வகையில் தண்டனை விதித்தது.
இந்நிலையில், ரிச்சா கபூர் எனும் பொதுநல வழக்கறிஞர் ஒருவர் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
குறித்த இளைஞர், நன்கு திட்டமிட்டே இப்படுகொலையை செய்துள்ளார். படுகொலையும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது போன்று சாட்சியங்கள் உள்ளன. ஆகவே மருத்துவ ரீதியில் குற்றவாளியின் வயது குறைவு எனும் ஒரே ஒரு காரணத்தை மட்டும் கொண்டு, இவ்வாறு குறைந்த பட்ச தண்டனை விதிக்கப்பட கூடாது என அவர் நியாயம் கோரியுள்ளார்.
இதேவேளை நொய்டாவின் புறநகர்ப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து அந்த இளம்பெண் ஒருவர் கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நொய்டா காவல்துரையினர் இருவரை கைது செய்துள்ளானர். இந்நிலையில் காவல்தூறையினரின் அலட்சிய போக்கினால் தான் இச்சம்பவம் நடைபெற்றதாக குறித்த பெண்ணின் உறவினர் குற்றம் சுமத்தியதை அடுத்து, நொய்டா, 58வது செக்டார் காவல் நிலையத்தில் பணி புரியும் 5 காவல்துறையினர் நேற்று அதிரடியாக சேவைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லபப்ட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளதுடன், அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

0 Responses to சிறார் துஷ்பிரயோகம், படுகொலை : 3 வருடங்கள் மட்டுமே சிறைத்தண்டனை?