பிரதம
நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை, மனித உரிமை
கடப்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தி ஒன்றை கொண்டு
செல்லும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள்
தொடர்பான விசேட நிபுணர், கெப்ரில்லா நோல் இந்தக் கருத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசர் விவகாரம் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணான செயலாகும்.
எனவே இலங்கை அரசு, நீதித்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் பிழை செய்த நீதிபதி ஒருவரை விசாரணை செய்யும் போது அடிப்படை
நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். என்றும் கெப்ரில்லா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஏற்கனவே கெப்ரில்லா தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு, அதற்கான பதிலையும் அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையிலேயேஅவர், மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடைமுறைகள்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கெப்ரில்லா அறிவித்துள்ளார்.
0 Responses to பிரதம நீதியரசர் விவகாரம் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணான செயலாகும்: ஐக்கிய நாடுகள் சபை