Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்ற நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டியின்  பரிந்துரையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் விதத்தில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவதற்கு ஆலோசனை வழங்க காங்கிரஸ் நீதிபதி வர்மா தலைமையில் கமிட்டி ஒன்று மத்திய அரசினால் நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி பல்வேறு தண்டனைகள் குறித்து ஆலோசித்து, காங்கிரசுக்கு பரிந்துரையும் செய்திருந்தது. இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்பதும் ஒரு பரிந்துரையாக இருந்தது. வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடி இன்று ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனையின் படி, குற்றவாளிகளுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மாவட்டங்களில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் மகளிர் காவலர்களை அதிகப் படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிப்பது, மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிக பட்சமாக 30 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை வழங்குவது இவைகளை காங்கிரஸ் கட்சி தீவிரவாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை? : காங்கிரஸ் யோசனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com