Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது மகளின் பெயரை வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு தான் விரும்புவதாக டெல்லி மருத்துவ கல்லூரியின் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் Sunday People பத்திரிகைக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். உலகம் எனது மகளின் உண்மையான பெயரை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மற்றைய பெண்கள் எனது மகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மாதிரியான தாக்குதலிலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்வது என அவர்கள் தைரியமாக செயற்படுவதற்கு எனது மகளின் பெயர் உந்து சக்தியாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், 'தன்னை பாதுகாத்து கொள்ள போராடிய போதே என் மகள் மரணமுற்றாள். அவளை நினைத்து பெருமைப்படுகிறேன்.' என தெரிவித்துள்ளார். தந்தை அனுமதி அளித்துள்ள போதும், குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக அம்மாணவியின் புகைப்படத்தை தாம் வெளியிடவில்லை என குறித்த பிரிட்டிஷ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

23 வயதான பிசியோதெரஃபி மாணவி கடந்த டிச.28ம் திகதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவாரங்களுக்கு முன்னர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டதால் மோசமான உடல் நிலைக்கு சென்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்தார். இதையடுத்து டெல்லி முதற்கொண்டு நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் குறித்த பெண்ணின் பெயர் விபரங்களையோ, புகைப்படத்தையோ வெளியிட ஊடகங்களுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

0 Responses to 'மகளின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க விரும்புகிறேன்': டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியின் தந்தை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com