புதன்கிழமை மதியம் வட ஈராக்கிலுள்ள ஒரு நகரத்தில் அமைந்திருக்கும் ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றில் மரணச்சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென உள்ளே நுழைந்த
தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது உடலில் அணிந்திருந்த குண்டுகளை
வெடிக்கச் செய்ததில் குறைந்தது 35 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர் எனவும்
மேலும் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் ஈராக் போலிசார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற நகரம் Tuz-Khurmato எனப்படும் பக்தாத்தில் இருந்து 200 Km வடக்கே அமைந்துள்ள இடமாகும். மேலும் இதற்கு முதல் நாள் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மரணமடைந்த அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற போதே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை நேற்று திங்கட்கிழமை ஈராக்கின் மஹ்முதியா நகரில் கார் குண்டு வெடித்ததில் 5 பேரும் பக்தாத்துக்கு வடக்கே தாஜி நகரில் உள்ள ராணுவ முகாம் அருகே கார் குண்டு வெடித்ததில் 6 பேரும் பலியாகியிருந்தனர்.
இன்னொரு புறத்தில் டஸ் குர்மாட்டு நகரின் சாலையோரத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த குண்டு வெடித்து குர்திஷ் பாதுகாப்பு வீரர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர். பலரின் உடல் நிலை மோசமாக இருப்பதனால் இவ்வெண்ணிக்கை 17 ஆக உயரும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜனவரி 15 முதல் 17 ஆம் திகதி வரை மட்டும் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 88 பேர் கொல்லப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

0 Responses to வட ஈராக்கில் மரணச்சடங்கு வைபவத்தில் குண்டு வெடிப்பு - 35 பேர் பலி