Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்துலகப் போட்டிகளில் இருந்து சிறிலங்கா துடுப்பாட்ட அணியை விலக்கி வைக்க வேண்டும் எனக் கோரி, சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு வெளியே எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த தமிழ்  இளையோர் அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
அவுஸ்ரேலிய – சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியின் தொடக்க நாளான நாளை காலை 9.30 மணியளவில்  Moore Park RD Driver AvE Cnr இல் இந்த எதிர்ப்புப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்த எதிர்ப்புப் போராட்டம்  தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தமிழ் இளையோர் அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சிறிலங்காவுக்கான எதிர்கால சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் நிறுத்துமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தையும் அவுஸ்ரேலிய துடுப்பாட்டச்சபையையும் கோருவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளர் கார்த்தீபன் அருள் தெரிவித்துள்ளார்.

'சிறிலங்காவில் உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கைக்கு சிறிலங்கா இணங்கும் வரையும்இ தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்கா அரசாங்கம் கைவிடும் வரையும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்குத் தடைவிதிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசுக்கும் துடுப்பாட்டத்துக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சிறிலங்கா அணிக்கு தடைவிதிக்கக் கோரி Moore Park Rd Driver Ave Cnr சிட்னி மைதானத்தில் நாளை எதிர்ப்புப் பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com