Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயிர் விலைகள் தொடர்கிறது.....

பதிந்தவர்: தம்பியன் 02 January 2013

புலிகள் பாசறையில் வளர்ந்த
போர்வீரன் றீகன் எங்கே
புலம்பெயர் தேசமதைப் பட்டுணர்ந்த
படைத்தலைவன்பருதி எங்கே.

தேசக் கீற்றாய் வீசியவெளிச்சம்
தேகம் முழுதும் ஊறியநெருப்பு
தலைவனின் தடம் தொடர்ந்தமக்கள் தளபதி
தமிழீழவிடுதலைக்கு வழி அமைத்தபடகோட்டி

யாரைநாம்வெறுத்தோம்
எவரை இங்கே பகைத்தோம்
எனோ வெள்ளைத் தெருக்களிலும்
வேண்டா வேதனைகள் தொடர்கிறது.

நீதியின் குரல்கள் நசுக்கப்பட
நாளைய தமிழீழத்தின் விடியலுக்காய்
பருதி,டில்றுக்சன்,நிமலரூபன்,செங்கொடியாய்
உயிர் விலைகள் தொடர்கிறது.....

விடுதலைக்குவேலியிடஎவராலும் முடியாது
அடிமைகளாய் வாழ்ந்துஅழிவதனைவிடவும்
முகவரியற்ற முண்டங்களாய்த் திரிவதனைவிடவும்
விடுதலைவெற்றிக்காய் உழைப்பதேமேல்.   .     
சா.வள்ளுவன்(போராளி)

0 Responses to உயிர் விலைகள் தொடர்கிறது.....

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com