Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் திறமையானவர். இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. 
அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜேத்மலானி தெரிவித்துள்ளார்.
’’ஈழத்தில் இனக்கொலை... இதயத்தில் இரத்தம்...’’ என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில் வெளியிடபட்டது. அது தற்போது மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா நேற்று மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அரங்கில் நடைபெற்றது.

புத்தகம் மற்றும் ஒளிப்பட குறுவட்டை, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜேத்மலானி வெளியிட்டு உரையாற்றினார்,

ஈழதமிழர்களுக்காக வைகோ தொடர்ந்து போராடி வருகின்றார். அவர் ஒரு தனிமனித ராணுவம். இங்கே உணர்ச்சிகரமாக அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கேட்டேன். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக என்னால் பேச முடியாது. யாராலும் பேச முடியாது. தாம் எடுத்து கொண்ட கருத்தை ஆணித்தரமாக உறுதியாக எடுத்துரைப்பதில் வைகோவிற்கு நிகர் வைகோதான்.

2011ம் ஆண்டு வைகோ என்னிடம் வந்தார். ஒரு பிரச்சினையில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றார். என்ன பிரச்சனை? என்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளவர்களை பற்றி அவர் கூறினார். எனக்கு அது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் குற்றவாளிகளே அல்ல. அவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை நான் படித்த அளவில் இதை நான் அறிந்து கொண்டேன். எனவேதான் தடை ஆணை பெற முடிந்தது.

வைகோ மராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்டு இருக்கின்ற இந்த புத்தகம் இலங்கை தமிழர்கள் பட்ட இன்னல்களை அவர்கள் அனுபவித்த வேதனைகளை முழுமையாக எடுத்துரைகின்றது.

இந்தியாவின் அணைத்து மாநில மக்களுக்கும் இந்த கருத்துக்கள் சென்று சேரவேண்டும் என்பதற்காக வைகோ இந்த முயற்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். மராத்தி மொழியில் இதை வாசிக்கின்றவர்களுக்கு, இலங்கையில் நடந்த கொடூரங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

ஈழதமிழர்களுக்காக வைகோ மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளை நான் பாராட்டுகின்றேன்.

நான் வைகோவை நேசிக்கிறேன். வைகோ உங்களை நேசிக்கிறார், அதனால் நானும் உங்களை நேசிக்கிறேன்.

தமிழர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வைகோவை நல்ல நண்பராக ஏற்று கொண்டு இருக்கின்றேன். அவர் மிகவும் திறமையானவர் இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என்று கூறி தன் உரையை நிறவுசெய்தார்  ராம்ஜேத்மலானி.

0 Responses to இந்திய நாட்டின் பிரதமராகக்கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com