Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முன்வைக்கப்பட உள்ளது.
உள்நாட்டில் இயங்கி வரும் இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த முயற்சியை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டவை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றவியல் பிரேரணை தொடர்பிலான அறிக்கை ஒன்று ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் குற்றவியல் பிரேரணைக்கு எதிராக இரண்டு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி முதல் மார்ச் மாதம் 10ம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to குற்றவியல் பிரேரணை ஜெனீவிவால் சமர்ப்பிக்கப்பட உள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com