உலகத் தமிழர்களின் பாதுகாப்பிற்கு குரல் எழுப்ப உலகில் தமிழர்களுக்கு என்று ஓர் அரசு இல்லை என்ற நிலையில் உலகத் தமிழர்களாகிய நாம் மக்களாக ஒன்றிணைந்தே நமது மக்களின் பாதுகாப்பிற்கு குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இடம்பெற்று முடிந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் இணையவழி காகொணியூடாக உரையாற்றும் பொழுதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தாயகத் தமிழர்களை பிரதநிதித்துவப்படுத்தும்தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள் பங்கெடுத்திருந்த இந்த மாநாட்டில் மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் உட்பட மலேசியாவின் பல தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.
விரைவில் மலேசிய தேசம் தேர்தல் ஒன்றிணைச் சந்திக்கவுள்ள நிலையில் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்த எதிர்கட்சித் தலைவரது வருகை முக்கியமானதொரு விடயமான பலராலும் நோக்கப்படும் நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஆதரிக்க முடியாது, இலங்கையில் நடந்தது உள்நாட்டு விவகாரம் அல்ல அது அனைத்துலக மனிதவுரிமை மீறல் என எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் கருத்து அமைந்திருந்தது.
இதேவேளை மலேசிய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நா.தமிழீழ அரசாங்கத்திற்கான தோழமை மையங்கள் பிராந்திய வாரியாக மலேசியாவில் அமைக்கப்பட்டு வருவதோடு தொடர்சியான அரசியல் கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதனொரு அங்கமாக தமிழ் தேசியத்தின் இன்றைய நிலைப்பாடு எனும் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது.
மலேசியாவின் கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்த இக் கலந்துரையாடல் நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆஸ்திரேலிய பிரதிநிதி க. மாணிக்கவாசகர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்திய பிரதிநிதி பேராசிரியை சரஸ்வதி, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், 'மே 17′ இயக்க ஒருங்கிணைப்பாளர் கா. திருமுருகன், சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் எல். சேகரன் மற்றும் மலேசியத் தமிழர் பேரவை தலைவர் மருத்துவர் ஐங்கரன் என சுமார் 100 தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் முன்னதாக பேசிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம்: தமிழீழ விடுதலைப் புலிகளை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தை கொண்டு அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றங்களை புரிந்துள்ளது சிறிலங்கா அரசு.
தமிழீழத்திற்காக தமது உள்ளத்தில் மலர்ந்த ஒரு நாட்டின் எதிர்காலத்தை நம்மிடையே அம்மக்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
அவர்களுடைய அந்த இலட்சியத்தை நிறைவேற்ற போராட வேண்டிய காலத்தின் கட்டயாத்தில் உலகத் தமிழர்களாகிய நாம் இன்று கூடியுள்னோம். அதற்கான புதிய உத்தியாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மலர்ந்துள்ளது.
இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான ஆதரவு தோழமை மையத்தை மலேசியாவில் உருவாக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். இந்த ஆதரவு தோழமை மையம் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டு அதற்கான குழு அமைப்படும் என கா. ஆறுமுகம் கூறினார்.
தொடர்ந்து பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின்பிரதிநிதி மாணிக்கவாசகர், 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அனைத்துலக சமூத்துடன் தமிழர்கள் தரப்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சித்தபோது, தடை செய்யப்பட்ட இயக்கம் என அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னரே ஜனநாயக ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கபட்டதாக கூறினார்.
உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான ஓர் அரசியல் அனுசரனை அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தடை செய்யப்பட்ட அமைப்பு, ஆயுததாரிகள் என எம்மை புறக்கணித்த அதே அனைத்துலகச் சமூகம், இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை பேசவருமாறு அழைக்கின்றது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலம் உலகத் தமிழர்கள் கொடுத்த அழுத்தம் எனக் கூறிய மாணிக்கவாசகர், தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் பாதுகாப்பு, கௌரவம் என எல்லாமே இருக்கும் என்றார்.
சிங்கள இராணுவம் தமிழ் சமுதாயத்தை அடித்து நொறுக்கி வேரோடு தமிழர்களை அழித்துவிடவேண்டும் என்ற முயற்சிக்கு பின்னாலும் உலக நாடுகள் பல பாசிச வெறி பிடித்த ராஜபக்சேவுடன் இணைந்து தமிழர்களை கூண்டோடு அழித்து விட வேண்டும் என களம் இறங்கியதாக இதன்போது பேசிய, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சரஸ்வதி கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் நிலை மக்களாக சிங்களவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய சூழ்நிலையாலேயே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பித்தது.
அந்த ஆயுதப் போராட்டம் பின்னடைவை எதிர்நோக்கினாலும் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை இன்னும் தொடர்கதையாகி வருவதால், அப்பிரச்னையை உலகளாவிய அளவில் ஓர் அரசியல் தளத்தில் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள காரணத்தாலேயே நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் விவரித்தார்.

0 Responses to உலகத் தமிழர்களின் ஒன்றிணைவே தமிழர்களுக்கான பாதுகாப்பு : மலேசிய மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன்