இந்நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது . அதை தொடர்ந்து கேணல் கிட்டு அண்ணா அவர்களின் வரலாற்றுக் காணொலி காண்பிக்கப்பட்டு பின்பு அவர் பற்றிய வரலாற்று குறிப்பு வாசிக்கப்பட்டது .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் தளபதியாக விளங்கிய கேணல் கிட்டு அவர்களின் நினைவாக ஆவணக் காப்பக நூலகம் ஆரம்பிக்கப்பட்டது .
இவ் ஆவணக் காப்பக நூலகத்தில் தமிழர் வரலாற்று நூல்கள் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று பதிவுகள் தாங்கிய ஆவணங்கள் அழியாதா சொத்தாக புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் எமது இளையோர்களுக்காக பாதுகாக்கப்படும் .
தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டம் அத்துடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் மாநாடு விடையமாகவும் அதைதொடர்ந்து நாம் முன்னெடுக்க வேண்டிய அரசியல் வேலைத்திட்டம் விடையமாகவும் தகவல்கள் அறிவிக்கப்பட்டது .
தகவல்
யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு



0 Responses to யேர்மனியில் நடைபெற்ற கேணல் கிட்டு அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவுநாள் (படங்கள் இணைப்பு)