Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 27ம் நாள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
 
தென்னாபிரிக்காவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள, இந்தக் குழுவில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இனவிவகாரங்கள், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை கற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்குச் சென்றிருந்த போது, தென்னாபிரிக்க அரசியல் கட்சிகள் விடுத்திருந்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

நிறவெறிக்கு எதிரான ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் பல ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில், அங்கு, மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் முழுமையான வெற்றியைக் கொடுத்தது.

ஆனால், விடுதலைப் புலிகளை 2009இல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணவோ, மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தவோ தவறிவிட்டது.” என்று அவர் மேலும் கூறினார்.

0 Responses to வரும் 27ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com