டெல்லியில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி ஜோதி சிங் பாண்டேயின் மரணத்திற்கு அவரது விதியே காரணம் எனவும், தாக்குதல்காரர்களிடம் நட்பாக அணுகியிருந்தால் தப்பித்திருக்கலாம் எனவும் ராஜஸ்தானை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
71 வயதான ஆன்மீக குருவான அசாராம் பாப என்பவர் டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பேசுகையில் 'இச்சம்பவத்தில் குறித்த ஐந்தாறு இளைஞர்கள் மாத்திரம் குற்றவாளிகள் அல்ல. பாதிக்கப்பட்ட பெண் மீதும் தவறு இருக்கிறது. அப்பெண் அந்த இளைஞர்களை சகோதரர்கள் என அழைத்து, அவர்களது முயற்சியை தடுத்திருக்கலாம். இது அப்பெண்ணின் வாழ்க்கையையும் விதியையும் காப்பாற்றியிருக்கும்' என கூறியிருக்கும்.
இதையடுத்து அசாராம் பாபுவின் கருத்துக்கள் அரசியல்வாதிகளிலும், இணைய பாவணையாளர்களிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அஹ்மதாபாத்தில் அசாராம் பாபுவுக்கு எதிராக போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரது கருத்துக்களை அவர் திரும்ப பெறவேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக பொதுவிடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி கடும் பிரச்சாரம் மேற்கொள்ள போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Responses to 'சகோதரர்கள் என அழைத்து கெஞ்சியிருக்கலாம்' : டெல்லி சம்பவம் ஆன்மீக குரு கருத்துக்கள் சர்ச்சையில்?