Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்தும் பங்களாதேஷில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் இடம் பெயர்ந்து வரும் நூற்றுக் கணக்கான ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் உட்பட பெரும்பாலான அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இரு பெரிய படகுகளில் புறப்பட்ட சுமார் 700 மியான்மார் நாட்டவர் மலேசியாவுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை மலேசியக் கடற்படையினரும் பின்னர் தாய்லாந்து கடற்படையினரும் விரட்டியடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்தோனேசியக் கடற்பரப்பில் நடுக்கடலில் மாதக் கணக்கில் தத்தளித்த இந்த 700 மியான்மார் நாட்டு அகதிகளை சமீபத்தில் தான் இந்தோனேசிய கடற்படை மீட்டுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் கோலா லங்காசா துறைமுகப் பகுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களோடு புறப்பட்ட 300 பேர் அடங்கிய இன்னொரு படகும் தாய்லாந்துக் கடற்பரப்பில் நுழைய முற்பட்ட போது விரட்டி அடிக்கப் பட்டதாகவும் தற்போது இவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூட செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த படகில் ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் அகதிகள் இருந்ததாகவும் சுமார் 3 மாதங்களாகக் கடலில் தத்தளித்த இவர்களது படகு கடந்த வியாழக்கிழமை மலேசிய எல்லைக்கு அண்மையிலுள்ள தாய்லாந்தின் கோஹ் லிப்பே தீவினை வந்தடைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பழுதாகியிருந்த இவர்களது படகின் எஞ்சினைத் திருத்திய தாய்லாந்து மாலுமிகள் குறித்த அகதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர்ப் பொதிகளை வழங்கி அவர்களை அந்தமான் கடலை நோக்கித் திருப்பி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆசியக் கடல்களில் நிலமை இப்படியிருக்க மறுபுறம் மத்திய தரைக் கடலில் இத்தாலிக் கடற்பரப்புக்கு அண்மையில் நிலமை இன்னமும் மோசமாகவுள்ளது. உள்நாட்டுப் போராலும், பஞ்சத்தினாலும் பாதிக்கப் பட்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக் கடல் வாயிலாகத் தரம் குறைந்த படகுகளில் அளவுக்கு மீறிய எண்ணிக்கையில் பயணித்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் இந்த அகதிகள் கடந்த சில வருடங்களாக ஆயிரக் கணக்கில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மட்டும் மத்திய தரைக் கடலில் சுமார் 2452 அகதிகள் மீட்கப் பட்டதாக இத்தாலியக் கடற்படை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மே 7 வரை சுமார் 34 570 அகதிகள் கடல் மார்க்கமாக இத்தாலியை வந்தடைந்திருப்பதாக அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இம்முயற்சியில் 1780 அகதிகள் நீரில் மூழ்கி இறந்திருப்பதாகவும் குறித்த அமைப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆசியக் கடல்களில் தத்தளித்து வரும் வங்கதேச மியான்மார் அகதிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com