Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது.

புதுக்கோட்டையில் நடந்த பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து புதுக்கோட்டை பாவாணன் பேசிய பேச்சுகளை கேட்டு உணர்வாளர்களே உருகிவிட்டனர்.

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார்.

கூட வந்தவர் தனது உழவு மாடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு துப்பாக்கி தான் வாங்கினார்கள்.
அந்த ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஒரு சிங்கள காவல் நிலையத்திற்குள் புகுந்த போது காவலர்கள் ஓடிப் போனார்கள். அங்கிருந்த 303 என்ற ரகத்தில் உள்ள 8 துப்பாக்கிகளை எடுத்து வந்தனர்.

அதில் 2 மட்டும் வேலை செய்தது. அடுத்து இந்த துப்பாக்கிகளுடன் இராணுவ முகாமிற்கள் நுழைந்து ஆயுதங்களை கைப்பற்றி ஆயுதங்கள் சேகரித்தார்கள்.

பின்னாளில் விடுதலைப் புலிகளை அடக்க பிரேமதாசா இந்தியப் படைகளை இலங்கையில் குவித்தார். போன படை நம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சிங்களவனுக்கும் தொல்லையாக இருந்தார்கள். அதனால் பிரேமதாசாவுக்கு சிங்கள மக்கள் நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனிடம் ஓடினார் பிரேமதாசா.

எப்படியாவது இந்திய படைகளை விரட்டுங்கள் ஆயுதங்கள் நாங்கள் தருகிறோம் என்றார்.

நாங்கள் கேட்கும் அளவுக்கு ஆயுதம் தர வேண்டும் என்று கேட்டார் தம்பி பிரபாகரன். 200 கண்டெய்னர்களில் ஆயுதம் வேண்டும் என்று கேட்டார்.

200 கண்டெய்னர் ஆயுதம் தருகிறோம். ஆதை கீழே இறக்கி வைக்க கூட உங்களிடம் ஆள் இல்லையே அப்புறம் எப்படி அந்த ஆயுதங்களை பயன்படுத்துவீர்கள் என்று நக்கலாக கேட்டார் பிரேமதாசா.

ஆயுதங்களுடன் உளவாளிகளையும் அனுப்புங்கள் எப்படி ஆயுதம் இறக்கப்படுகிறது என்று பார்த்து வரச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார்.

ஆயுதம் வந்தது. 3000 விடுதலைப் புலிகள் சில நிமிடங்களில் ஆயுதங்களை இறக்கினார்கள். இதைப் பார்த்து அசந்து போனான் சிங்களவன்.

இத்தனை புலிகள் எங்கிருந்தார்கள். என்று கேட்டான். தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள் மொத்தமாக வந்து பலத்தை இழக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல என்றார் பிரபாகரன்.

400 குண்டுகளுடன் வந்தான் விழுப்புண் பெற்ற சார்லஸ் அன்டனி

அதிக விழுப்புண் பெற்றவன் என்றால் நம் தமிழ் மன்னன் ஒருவன் தான் என்பதை இலக்கியங்களும் வரலாறுகளும் சொல்லி கேட்டிருக்கிறோம்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பி மேல் சட்டை இல்லாமல் வெறும் கைலியை மேலில் போர்த்திக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்தார்.

அப்போது அவரிடம் ஒரு மேல் சட்டை தருகிறோம் என்று சொன்னேன். வேண்டாமண்ணா என்னால் மேல் சட்டை போட முடியாது என்று சொல்லி போர்த்தி இருந்த கைலியை எடுத்தார்.
உடலில் 400 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து எடுக்கப்படாமல் இருந்தது எங்களுக்கு மயக்கம் வந்தது.

அந்த தம்பி பயமறியாமல் இருந்தான். மகிழ்வுந்து வந்தது மதுரைக்கு ஏற்றி அனுப்பினோம் சிகிச்சை பெற்ற தம்பி மீண்டும் களமாட போனான்.

களமாடி களத்தில் நெஞ்சிலே குண்டு பாய்ந்தது மாண்டு கிடந்த ஒரு உருவத்தைப் பார்த்து கதறினோம்.

400 குண்டு பாய்ந்து உயிர் பிழைத்த தம்பியல்லவா இது. அவனா செத்தான். அவன் முன்பு சொன்ன பெயரை சொல்லி வருந்தினோம் இல்லை அவன் சார்லஸ் அன்டனி அவன் செல்லும் இடங்களில் ஒரு பெயர் சொல்வான் பாதுகாப்பிற்காக என்றார்கள்.

செத்தாலும் களத்தில் சாகவேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் பொறுப்பு.

இவ்வாறு பேசினார் பாவாணன்.

1 Response to விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம்: புதுக்கோட்டை பாவாணன்

  1. Anna Emathu Karuthum ivaithan anna

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com