Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவின் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசானது தமிழ்பேசும் மக்களது சுதந்திரமான செவிமடுக்கும் உரிமைக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்சினை தலைமையகமாக கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடக அமைப்பானது ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவினை மையப்படுத்தி இடம்பெற்றிருந்த தகவல்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் செவிகளுக்கு சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பிபிசி தமிழோசை மீதான திட்டமிட்ட தடங்கல்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழர்களின் சுதந்திரமான கேட்கும் உரிமையினை பறித்தெடுக்கும் ஓர் மறைமுக வடிவமாகவே சிங்கள அரசினது இந்த நடவடிக்கையினை கருதமுடியுமெனத் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிபிசி தமிழோசை ஒலிபரப்பின் மீது இலங்கை ஒலிபரபரப்பு கூட்டுத்தாபனம் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக இலங்கைக்கான தனது ஒலிபரப்பினை பிபிசி தமிழோசை இடைநிறுத்தியிருந்தது.

இதேவேளை எல்லைகளற்ற ஊடக அமைப்பின் ஆசிய-பசுபிக் பிராந்திய பொறுப்பதிகாரி Benjamin Isma�l அவர்களுடனான சந்திப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகஅமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் இலங்கையில் தமிழ் ஊடக சமூகத்தினர் சந்திக்கின்ற நெருக்கடிகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மன்னார் பகுதியில் செயற்பட்டு வருகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடக சமூகத்தினர் சந்திக்கின்ற நெருக்கடிகள் குறித்தான களஆய்வறிக்கையொன்று தமிழர் தாயகத்தில் இருந்து தருவிக்கப்பட்டு ஊடக அமைச்சரினால் கையளிக்கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்களும் பங்கெடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழர்களின் சுதந்திரமான செவிமடுக்கும் உரிமையினையும் பறித்தெடுக்கும் இலங்கை அரசு: தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com