Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் இருக்கும் சிங்கள தூதுவர் பிரசாத் காரியவசம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பிரசாரம் செய்து வருகிறார். இது இந்திய அரசுக்கு தெரிந்தும் இந்த பிரச்சாரம் மேற்கொள்வது நியாயமானது அல்ல. அதனால் இந்தியாவில் உள்ள தூதுவர் அலுவலகம் செயல்பட அனுமதிக்க கூடாது. என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சோழதரம் அருகே குமாரக்குடியை சேர்ந்த கீரப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,

இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளிவந்ததை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள்.

ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா தீர்மானத்தை திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அரசு ஏமாற்றியதை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து வரும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை திரும்ப பெற்றுள்ளோம்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டசபை கூட்ட தொடரில் தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்று முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தீர்மானத்தை நேரடியாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வற்புறுத்துகிறோம்.
இந்தியாவில் இருக்கும் சிங்கள தூதுவர் வட இந்திய மாநில கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர்களை சந்தித்து தமிழர்களுக்கு எதிரான பிரசாரம் செய்து வருகிறார்.

இது இந்திய அரசுக்கு தெரிந்தும் இந்த பிரச்சாரம் மேற்கொள்வது நியாயமானது அல்ல. அதனால் இந்தியாவில் உள்ள தூதவர் அலுவலகம் செயல்பட அனுமதிக்க கூடாது.

சென்னையில் மயிலை மாங்கொள்ளையில் வருகிற 14-ந் தேதி அம்பேத்கார் பிறந்தநாள் அன்று மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெறுகிறது.

இதில் சான்றோர்களுக்கு அம்பேத்கார், பெரியார், காமராஜ், காயிதேமில்லத் மற்றும் செம்மொழி விருதுகள் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

0 Responses to இந்தியாவில் உள்ள சிங்களவர் தூதுவர் அலுவலகம் செயல்பட அனுமதிக்க கூடாது: திருமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com