புதுக்கோட்டை மாவட்டம்
கோட்டைப்பட்டிணம் கடற்கரை கிராமம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.
இதே கிராமத்தில் இருப்பவர் சகாபுதீன். வெளிநாடு சென்று சில நாட்களுக்கு
முன்பு ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
இவரது
உறவினர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்காக இவரது 3 வயது மகளுக்கு
சுமார் 8 பவுன் தங்க நகைகளை போட்டுள்ளனர். நேற்று மாலை 5.30 மணி வரை
வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த மகள் ஷகானா வை காணவில்லை என்று
தேடினார்கள். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். சுற்றுவட்டார
கிராமங்களிலும் உறவினர்கள் ஷகானாவை தேடிக் கொண்டிருந்தனர்.
இரவு 8. மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் அருகில் உள்ள
கடற்கரை ஓரமாக ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதைப் பார்த்த உறவினர்கள் அதை
பிரித்து பார்த்தனர். அதற்குள் குழந்தை ஷகானா உடலில் பல இடங்களில்
காயங்களோடு கிடந்துள்ளார்.
உடலை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் உறவினர்கள். அதன்
பிறகு திரண்ட உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்க வேண்டும் என்று கோரி கிழக்கு
கடற்கரைச் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனார். இதனால்
போலிசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி
நடத்தினார்கள்.
அதன் பிறகு ஷகானாவின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
வரப்பட்டு பிரேத பரிசோதணைக்கு பிறகு வெள்ளிக் கிழமை காலை 11.05. மணிக்கு
உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட்டது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால் ஷகானா
உடலுக்கு கோட்டைப்பட்டிணத்தில் சிறப்பு தொலுகை செய்து அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரை பொதுமக்களே பிடித்து
போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை செய்து
வருகின்றனர். கிழக்கு கடற்கரை கிராமங்களில் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.




0 Responses to நகைக்காக குழந்தையை கடத்திக் கொலை! உறவினர்கள் சாலை மறியல், போலிஸ் தடியடி! (படங்கள் இணைப்பு)