சிவகங்கை மாவட்டம்
காளையார் கோயிலில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும்,
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை
எடுக்க கோரியும் - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய
ஆர்பாட்டத்தை மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் தொடங்கி வைத்து
பேசினார்.
ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஈழத்திற்காக போராடும் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் அமீர் அப்பாஸ், மானா மதுரை தீனதயாளன், சகுபர் சாதிக், காரை பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)