Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

’தனிஈழம்’ கோரி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை, மறியல் போன்ற அறப்போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். 

இலங்கையில் நடைபெற்ற அட்டூழியங்களுக்கு எதிராக தமிழ்த் திரையுலகமும் கொதித்தெழுந்து, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ” தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மாணவர் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி முன்வரிசையில் நின்று மாணவர்கள் போராடும் போது, கடைசி வரிசையில் நின்று என் ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்பேன். ஒன்றுமறியாத பச்சிலம் பாலகன் பாலச்சந்திரனின் அவல நிலையைக் கண்டு பொங்கி எழாதவர்கள் எவரும் இல்லை” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனின் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்ட ரசிகர்கள், அடுத்து ரஜினிகாந்த் இதுகுறித்து என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ்த்திரையுலக நடிகர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகர்களுக்கான சேவை வரியை எதிர்த்து நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ரஜினி உட்பட தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டதால், நடிகர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டால் ரஜினி என்ன பேசுவார் என்பதை அறிய திரையுலகினரும்,  ரசிகர்களும் மிகவும் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

0 Responses to தனிஈழம்: விஸ்வரூபமெடுத்த கமல்! என்ன சொல்லப் போகிறார் ரஜினி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com