இலங்கைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பதால், ஏப்ரல் 1ம் திகதி திறக்க இருந்த கல்லூரிகள் மேலும் தாமதமாக திறக்கப்படலாம் என தெரிய வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு முடிந்த நிலையிலும், மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர். இப்படி மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து அறிவித்து உள்ளதால், கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளையும், ஏப்ரல் 1ம் திகதி அன்று, திறக்கலாம் என்று அரசிடம் உயர் கல்வித்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், கல்லூரிகள் திறப்பதை தாமதப் படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மாணவர்களின் மன நிலை குறித்து போலீஸ் உளவுத்துறை பிரிவு மூலமாகவும், கல்லூரிகள் வழியாகவும், உயர் கல்வித்துறை தினமும் அறிக்கை பெற்று வருகிறது. போராட்டங்களில் தீவிரமாகும் மாணவர்களை மேலும் சில நாட்கள் விட்டு பிடிக்கலாம் என்று தெரிய வருகிறது.
எனவே கலை, அறிவியல் கல்லூரிகள், உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் 1ம் திகதி திறக்கப்பட் மாட்டாது என்றும், 1ம் திகதிக்குப் பிறகுதான் திறக்கும் திகதி பற்றி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




0 Responses to கல்லூரிகள் திறப்பது மேலும் தாமதமாகும்?