தமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான
போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ
பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள
உண்ணாவிரதத்தினை இன்று காலை 10 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா
இனவாத அரசின் கொடூரங்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன்
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும், சிறிலங்காவில் நடைபெற்ற
இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், தமிழர்களின்
தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர்களின்
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள்
முன்வைத்தனர்.
ஈழ விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவரும் தமிழக
மாணவர்களுடன் இணைந்து அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முற்றுமுழுதாக
ஆதரித்தே இப்போராட்டம் நடந்து வருகின்றது.




#





#





0 Responses to ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ மாணவர் உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)