இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த
வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை நட்பு
நாடு என்ற வாதத்தை இந்தியா நிறுத்த வேண்டும். இலங்கையின் போர்க்குற்றம்
குறித்து சர்வதேச புலன் விசாரணை நடத்த வேண்டும். போர்க்குற்றம்
நிரூபிக்கப்பட்டால், சர்வதேச கோர்ட்டில் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
என சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.




0 Responses to இலங்கையில் பொது வாக்கெடுப்பு: நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா நிறுத்த வேண்டும்: சட்டசபையில் தீர்மானம்