மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் - சோனியா காந்தி என இரு அதிகார மையங்களை கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயற்பட்டு வருவது ஒரு தோல்வி பார்முலா என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
சோனியா செய்ததை போன்று பிரதமராக ஒருவரை நியமிக்காமல், ராகுல் காந்தியே நேரடியாக பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் உருவெடுக்க வேண்டும் என தாம் ஆசைப்படுவதாக திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமராக இருக்கும் ஒருவருக்கு செயற்பட முழு அதிகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பிரதமராக இருப்பவர்தான் காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் செயற்பட வேண்டும். ராகுல் காந்தி பிரதமர் பதவியை மறுத்து ஒரு நாளும் பேசவில்லை. ஊடகங்கள் அவர் பேச்சை திரித்து வெளியிட்டு விட்டன இதை அவரே என்னிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.




0 Responses to சோனியா - மன்மோகன் சிங் என்ற ஆட்சி முறை ஒரு தோல்வி போர்முலா - சொல்பவர் காங்கிரஸ் தலைவர்