தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்ஷே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து, மாணவர்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறுகையில்,
"எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக 27ம் திகதி முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை நடக்க விடமாட்டோம். தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்வோம். யாருக்கு ஆதரவு என்பதை இப்போது சொல்ல முடியாது. இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்றால், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்திய - மத்திய என்கிற வாசகத்தை தார் பூசி அழிப்போம்." என்று கூறியுள்ளார்.




0 Responses to தேசிய கட்சிகளை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் : மாணவர் போராட்டக் குழு அறிவிப்பு!