Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளட்டும்.

ஆனால், இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அந்த அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும் தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தால், தென் சீனாவின் யுவான் மாகாணத்தில் அல்லது வியட்நாம் அல்லது லாவேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து பௌத்த மதத்தை சேர்ந்த யுவதிகளை இலங்கை அழைத்து வருமாறும் மல்லிக்காராச்சி மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையிலுள்ள இந்திய தமிழர்களை அழைத்துச் செல்லுமாறு தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com