இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும். இவ்வாறு வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இலங்கைத் தூவர் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ந் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிங்களவர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என குறிப்பிட்டு அனுப்பிய ஈமெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஈமெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது.
ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரசாத் காரியவசத்தின் ஈமெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் மூலம் இந்த ஈமெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தின் விஷம பிரசார ஈமெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் காரியவசத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.
அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

0 Responses to சிங்களவர்களின் பூர்வீகம் வட இந்தியா! இலங்கைத் தூவர் பிரசாரம்