Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம்கள் நீதித்துறையின் கண்காணிப்பின்கீழ் வராது என்பது குறிபிடத்தக்கது. ஈழ தமிழனாக பிறந்து ஏதிலியாக புலம்பெயந்தவர்களை கியூ பிரிவு போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி எவரைவேண்டுமானாலும் சிறப்பு முகாம்களில் அடைத்துவிடலாம். நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. “வெளிநாட்டினர் சட்டம்” என்ற ஒரு சட்டப்பிரிவை மட்டுமே போதுமானது.

சிறைவாசிகளுக்கு இருக்கும் அடிப்படை வசதிகள் கூட இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு இல்லை. எந்த காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டோம் எப்பொழுது விடுவிக்கப்படுவோம் என்ற தகவல்கள் கூட தெரிவிக்கப்படுவதில்லை. இவர்களின் தண்டனை காலத்தை எந்த நீதிமன்றமும் முடிவு செய்வதில்லை என்பதால் சிறப்பு முகாம் அடைபட்டவர்கள் தங்களின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரியும், வழக்கை விரைவாக விசாரிக்க கோரியும், நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்களை தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 20 நாட்களாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களை பார்க்க வரும் உறவினர்களையும் கியூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக உறவினர்களோடு எந்ததொடர்பும் இல்லாமல் தனிமைபடுத்தப்பட்டனர். “வெளிநாட்டினர் சட்டம்” என்ற சட்டப்பிரிவில் முகாமில் அடைபட்டவர்கள் உறவினர்களை சந்திப்பதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. கியூ பிரிவு போலீசாரின் இந்த சட்டமீரல்களை கன்டித்து 27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இவர் சந்தேகத்தின் அடிப்படையிலும், ஈழத்தமிழர் மீது 3 [e] 2 ஆனையில் கூரப்பப்படும் முறைப்படுத்தல் என்பதின் அடிப்படையிலும் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்ப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கிறார்.

சந்திரகுமாரை பார்க்க அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்திரகுமார் மனைவியும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் 28.03.2013 இரவு 9.00 மணிக்கு சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரகுமாரின் மனைவியும் அவரின் இரண்டு குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்ற தகவல் சந்திரகுமாரிடத்தில் தெரியவில்லை. அதனால் மனஉலச்சலுக்கு ஆலான சந்திரகுமார் மனமுடைந்து நாற்பதிற்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துகொள்ள முயற்சித்துள்ளார். அந்தமுகாமைச் சார்ந்தவர்களின் முயற்சியால் உடனடியாக அரசு பொதுமருத்துவமணைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசரசிகிச்சை (ஐசியு) பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், மிகவும் கவலைகிடமாக உள்ளதாகவும் 48 மணி நேரத்திற்குப்பிறகுதான் எதுவும் சொல்லமுடியும் என்று மருத்துவர்கள் சொல்வதாகவும் தொடர்ந்து தகவல் வந்துகொண்டேயிருக்கிறது.

 

0 Responses to ஈழ சிறப்பு அகதி முகாமைச் சேர்ந்த சந்திரகுமார் தற்கொலைக்கு முயற்சித்து கவலைகிடம்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com