சென்னை
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய மாணவர் சி.பி.லெஷ்மன்,
இந்தியாவில்
நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து
விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும்,
பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில்
உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
திருச்சியில்
மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை
தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து
கொண்டுள்ளோம் என்றார்.




0 Responses to தமிழர்கள் வாழ்வில் விளையாடி விட்டாய்; விளையாட்டு உனக்கு முக்கியமா? மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)