ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள
சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக
கருதப்படுகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடொன்று தமிழகத்தில் இடம்பெறவுள்ளது.
சமகாலத்தில் தமிழகத்தில் தோற்றம் பெற்றுள்ள
உணர்வெழுர்ச்சியான நிலை புலம்பெயர் தமிழர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு
வரும் சூழலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த ஊடக மாநாடு
இடம்பெறுகின்றது.
எதிர்வரும் மார்ச் 18ம் நாள் திங்கட்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டில் தமிழக ஊடக உறவுகைள பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம் குறித்தும் - உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தும் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை தமிழீழம் நோக்கிய தமிழர்களின் அரசியற் செயற்பாடுகள் குறித்தும் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் எடுத்தியம்பவுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஓருங்கிணைப்பில் இடம்பெறுகின்ற இந்த இந்த ஊடாக மாநாட்டில் இணையவழி காணொளியூடாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கவுள்ளார்.
Regus Hall / City Centre / 6th Floor /Mylapore/ Chennai.எனும் முகவரியில் 18/03/2013 அன்று மதியம் 1:30 மணிக்கு இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது.

0 Responses to தமிழக ஊடக உறவுகளுக்கு தமிழீழ அரசாங்கம் அழைப்பு