நெல்லை மாவட்டம்
களக்காடு மலையில் புலிகள் வனக்காப்பம் அமைக்கப்பட்டு அங்குள்ள அரியவகை
உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள யானை, கரடி, மான் மிளா
காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி
ஊருக்குள் வருவதுண்டு இவைகளில் சில, வனத்துறையினரால் மீட்கப்பட்டு வனத்தில்
விடப்படுகின்றன. சிலவைகள் அண்மைக்காலமாக மர்மமான முறையில் மடிந்து
வருகின்றன.
அது
இயற்கை மரணமா. அல்லது வேட்டைககாரர்களால் வேட்டையாடப்பட்டதா என்கிற,
சந்தேகம் எழுந்துள்ளது கடந்த 22ந் தேதி மஞ்சுவிளை மலையடி வாரத்தில் இறந்து
கிடந்த பெரிய மிளாவின் கால்களை வெட்டி எடுத்து சூப் வைத்து சிலர்
குடித்தனர்.
இது
தொடர்பாக வனத்துறையினர் 4 பேரை பிடித்து 14 ஆயிரம் அபராதம் விதித்தனர்
இந்த மிளா வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என மக்கள் தரப்பில் சொல்லப்பட.
வனத்துறையினரோ காட்டு செந்நாய்கள் கடித்து இறந்துள்ளன என்கின்றனர். இப்படி
முரண்பட்ட தகவல்கள் கிளம்பிய வேளையில் அரிய வகை விலங்கினமான காட்டுப்
பூனையை விவசாயி ஒருவர் சமைத்து சாப்பிட இதையறிந்த வனத்துறையினர் அவரைப்
பிடித்து அபராதம் விதித்தனர் இறைச்சியையும் கைப்பற்றினர். கடந்த 26ந் தேதி
ஆண் கரடி ஒன்று இறந்து கிடக்க, அது நோய்வாய்ப்பட்டு இறந்தது என வனத்துறை
தரப்பில தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது வேட்டையாடப்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கின்றனர்.
இது
போல் வனவிலங்குகள் ஒரு வாரத்திற்குள் மர்மமான வகையில் உயிரிழந்துள்ளன.
ஆனால் பல சம்பவங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டு விட்டன என அதிர்ச்சியை
வெளிப்படுத்தும் இயற்கை நல ஆர்வலர்கள். இதன் பின்னணி விவகாரங்கள்
கண்டறியப்படவேண்டும்.
வேட்டையாடப்பட்டதா!?. அல்லது இயற்கை மரணமா. வனத்துறையினர் விசாரித்து
உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தவறும்பட்சத்தில் அரியவகை வனவிலங்குகள்
அழிந்து விடும் என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
செய்தி: பரமசிவன்
படங்கள்: ஸ்ரீசக்கரவர்த்திராம்
படங்கள்: ஸ்ரீசக்கரவர்த்திராம்




0 Responses to வனவிலங்குகளின் மர்ம மரணம்! வேட்டையாடப்பட்டதா? இயற்கை மரணமா? (படங்கள் இணைப்பு)