Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடகா மாநில உடுப்பி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுபதி பட், இளம் பெண் ஒருவருடன், உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள், உடுப்பி மாவட்டம் முழுவதும், உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. 

நேற்று காலை, தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலம் முழுவதும், இந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது. இது கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக, ரகுபதி பட் கூறியதாவது: பெண் ஒருவருடன் நான், உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பானதும், அதுதொடர்பாக, "சிடி'க்கள் வெளியானதும், என் கவனத்துக்கு தற்போது வந்துள்ளது. இதை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். அக்காட்சியில் இருப்பது, நான் இல்லை.
தேர்தல் நேரத்தில், என் மீது களங்கம் சுமத்த சதி செய்துள்ளனர். என் தனிப்பட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் தவறாக பயன்படுத்தி கொள்ள முன் வரலாம். இதனால், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இவ்வாறு ரகுபதி பட் கூறினார்.

மாநில பா.ஜ., தலைவர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ரகுபதி பட் இடம் பெற்றுள்ள, ஆபாச படம் தொடர்பாக, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வீடியோ காட்சி மிகவும் பழையது என, கூறப்படுகிறது. ரகுபதி பட்டின் அரசியல் எதிரிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால், பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என்றார்.

ரகுபதி பட், உடுப்பி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ஆனதும், அவரின் மனைவி பத்மபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ரகுபதி பட்டே காரணம் என, புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின், படுபித்ரே அருகில், 44 ஏக்கர் நிலத்தை மோசடியாக பெற்று, மும்பையில் உள்ள தன் நண்பருக்கு, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அவர் படுக்கை அறையில் பெண்ணுடன் இருப்பதைப்போல வெளியான வீடியோ விவகாரம் அவருக்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது- 

கர்நாடகா சட்டசபையில், பா.ஜ., அமைச்சர்கள், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த சர்சை இன்னும் ஓயாத நிலையில், அம்மாநில உடுப்பி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுபதி பட் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ., உல்லாசம்! தொலைக்காட்சிகளில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பால் பெரும் பரபரப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com