Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சல்மான் குர்சித்திற்கு வரலாறு தெரியாது இந்தநிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்ட மன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமைச்சர் சல்மான் குர்சித் நிராகரித்திருந்தார்.

ஏனைய மாநிலங்களின் நிலைப்பாட்டை அறியாமல், தமிழகத்தின் கோரிக்கை அடிப்படையில் மாத்திரம் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த கருத்துக்களை கண்டித்துள்ள பழ.நெடுமாறன், சல்மான் குர்சித் வரலாறு தெரியாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திராகாந்தி போன்றோர், இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதலின் போது யசீர் அரபாத்துக்கு ஆதரவளித்தமை, பங்களாதேஸ் விடுதலைப் போரில், சேக் முஜிபுர் ரஹ்மானுக்கு ஆதரவளித்தமை போன்ற சந்தர்ப்பங்களில் மாநிலங்கள் அவையின் அனுமதியை அவர்கள் கோரிஇருக்கவில்லை என்றும் நெடுமாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தியாவினால் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவின் வரலாறு தெரியாத சல்மான் குர்சித், அந்த பதவிக்கு பதவியில் இருந்து விலக வேண்டும்என்றும் பழ நெடுமாறன் வலியுறத்தியுள்ளார்.

0 Responses to சல்மான் குர்சித்திற்கு வரலாறு தெரியாது - பழ.நெடுமாறன்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com