செந்தமிழ்ச்செல்வன் சீமான் அவர்கள் 27.03.2013ம் திகதி செவ்வாய்கிழமை பிரான்சு பாரிசுக்கு வருகை தந்திருந்தார். காலை கேணல். பரிதி அவர்களினதும், மற்றும் லெப் கேணல். நாதன் கப்டன் கஐன் ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்று வணக்கம் செலுத்தியதுடன் தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலைக்குச்சென்று வணக்கம் செலுத்தி பின்னர் மாவீரர் கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்திற்கு சென்றும் வணக்கம் செலுத்தியிருந்தார்.
நண்பகல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு காரியாலையத்தில் நடைபெற்ற உறுப்பினர்களின் சந்திப்பிலும் கலந்து கொண்டதுடன் ரிரிஎன் தொலைக்காட்சி கலையகத்திற்கும் சென்றும் பி.பகல் 4 மணிக்கு மக்ஸ்தொர்மி மண்டபத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியதுடன். மக்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலும் அளித்திருந்தார்.
இவ் ஒன்று கூடலில் மண்டபம் நிறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தடா சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டதுடன் உரையும் ஆற்றியிருந்தார்.



0 Responses to பிரான்சில் செந்தமிழன் சீமான் (காணொளி, படங்கள் இணைப்பு)