Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஈராக்கில் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கிடையே அடிக்கடி நடந்து வரும் மோதல்களில் பலர் பலியாகி வருகின்றனர். இது குறித்த செய்திகளைப் பாரபட்சமின்றி ஒளிபரப்பி வருவதால் அந்நாட்டில் இயங்கும் அல்ஜசீரா உட்பட 10 முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளை அதிரடியாக ஈராக் அரசு தடை செய்துள்ளது.

தடை செய்யப் பட்டவற்றில் அல் ஜசீரா, அல் ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா, ஆகியவை முக்கியமானவை ஆகும்.

இந்த அதிரடி நடவடிக்கை ஷைட்டி முஸ்லிம்களால் ஆளப்படும் ஈராக்கில் கடந்த ஒரு வாரத்துக்குள் சுன்னி போராளிகளுடன் மூண்ட மோதலில் 180 பேர் வரை கொல்லப் பட்டதையடுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சேனல்களில் 8 சுன்னி முஸ்லிம்களுக்குச் சார்பாகவும் ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கினை விமர்சித்து வந்தவை எனவும் கூறப்படுகின்றது. இது மட்டுமன்றி ஈராக் அரசு சுன்னி முஸ்லிம்களால் அவ்வப் போது மேற்கொள்ளப் படும் ஆர்ப்பாட்டங்களையும் இராணுவக் கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இறுதியாக ஹாவ்ஜா எனும் நகர மத்தியில் மேற்கொள்ளப் பட்ட சுன்னி பேரணியினை அடக்க முயன்றதில் 23 பொது மக்களும் 3 இராணுவத்தினரும் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் குடா நாடும் எண்ணெய் வளம் மிகுந்ததுமான கட்டாரினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அல்ஜசீரா ஈராக்கின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மிகுந்த ஏமாற்றத்தினை அடைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டுள்ளது. அல்ஜசீரா மேலும் கூறுகையில் நாம் பக்கச்சார்பின்றியே ஈராக்கில் நடக்கும் சம்பவங்களைப் பல வருடங்களாக ஒளிபரப்பி வந்ததாகவும் ஒரே நேரத்தில் 10 சேனல்களைத் தடை செய்வது என்பது அடக்கு முறையையே குறிப்பதாக அமையும் எனவும் இது உலக நாடுகளுக்கு வெளிப்படை எனவும் தெரிவித்துள்ளது.

0 Responses to அல்ஜசீரா உட்பட 10 தனியார் தொலைக்காட்சிச் சேவைகளை ஒரே நேரத்தில் தடை செய்த ஈராக்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com