உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 18ம் திகதி சரணடையத் திட்டமிட்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத் என்று தெரிய வருகிறது.
தற்போது படப்பிடிப்புக் காட்சிகளை நடித்து முடிக்கும் பணியில் மிகத் தீவிரமாக சஞ்சய்தத் ஈடுபட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதோடு சரணடைய நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசமும் வழங்கி இருந்தது.
அதன்படி வரும் 18ம் திகதி சஞ்சய் தத் சரணடையத் திட்டமிட்டுள்ளார். அதற்குள் தாம் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக் கட்சிகளை முடித்துவிடுமாறு சஞ்சய்தத் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அமீர்கான் போன்ற உடன் நடிக்கும் சக நடிகர்களும் சஞ்சய்தத் வசதிக்கேற்ப தங்களது திகதிகளை மாற்றிக் கொடுத்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
வரும் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை தாம் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக் காட்சிகளில் மும்முரமாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் சஞ்சய் தத் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய மாநில ஆளுநர் சங்கர நாராயணனிடம் சஞ்சய் தத் விஷயமாக 60 மனுக்கள் குவிந்தன என்றும், இதில் சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது என்று மட்டும் 25 மனுக்கள் வந்ததாகவும், மற்றவை சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சஞ்சய்தத் தாம் பொது மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும், சிறைத் தண்டனை அனுபவிக்கத் தயாராக உள்ளதாக கூறியதும் குறிப்பிடத் தக்கது.




0 Responses to உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 18ம் திகதி சரண் அடைகிறார் சஞ்சய்தத்