கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸின் அழகை பொதுமேடையில் வைத்து புகழ்ந்ததால் எழுந்த சர்ச்சைகளை அடுத்து, தமது வர்ணனைக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாரக் ஒபாமா.
அமெரிக்காவின் மிக அழகிய அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரீஸ் என கலிபோர்னியாவில் நடைபெற்ற நிதி திரட்டும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒபாமா மேடையில் வைத்து கமலா ஹாரிஸை புகழந்து தள்ளினார்.
மிகத்திறமையானவர். அர்ப்பணிப்பானவர், சட்டத்தரணிகள், அட்டர்னி ஜெனரல்கள் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அப்படியே இருப்பவர். அமெரிக்காவின் மிக அழகிய அட்டர்னல் ஜெனரல் என்பது உண்மை என ஒபாமா கூறினார்.
ஒபாமாவின் இந்த கருத்துக்களுக்கு சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. ஒபாமாவின் மிக நீண்டகால நெருங்கிய தோழி என்பதனால், ஒருவருடைய அழகை வைத்து அவரது வேலைக்கு முடிச்சுப்போடக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒபாமா சார்பில் வெள்ளை மாளிகை இன்று விடுத்துள்ள அறிவிப்பில் ஒரு பெண் வேலைஇடத்தில் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து நன்றாக தெரிந்திருப்பதாகவும், ஒருவரின் அழகை வைத்து அவரை வேலை இடத்தில் தீர்மானிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமலா ஹாரிஸின் தொழில் திறமை, அவரது தகுதியை அழை காரணம் காட்டி எடை போட தாம் நினைக்கவில்லை எனவும், ஒபாமாவின் கருத்துக்களால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளுக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தேவைகளுக்காக கடத்தப்படும் பெண்களின் அவல நிலை குறித்தும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் துன்பங்களை மையப்படுத்தியும், அவற்றை வெளிக்கொணரும் விதத்தில் தொடர்ந்து தனது சட்டத்துறையில் கடுமையாக உழைத்து வருபவர் கமலா ஹாரிஸ் எனும் நற்பெயர் அவர் வட்டாரத்தில் நிலவுகிறது.

0 Responses to கமலா ஹாரிஸின் அழகை விமர்சித்தமைக்கு மன்னிப்பு கேட்டார் பாரக் ஒபாமா