பிரதமர் வேட்பாளராக அத்வானியை முன் நிறுத்தினால், மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று விஜய் கோகலே தெரிவித்துள்ள கருத்து பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக வின் நிர்வாகி விஜய் கோகலே, "பிரதமர் வேட்பாளராக அனுபவசாலியான அத்வானியை முன் நிறுத்த வேண்டும். அப்போதுதான் பாஜக மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்." என்று கூறியுள்ளார். பாஜகவில் இது பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய நிலையில் தாம் அப்படி கூறவில்லை என்றும்,
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் குறித்து நாடளுமன்ற கூட்டு குழுதான் முடிவு செய்யும் என்றும், விஜய் தற்போது கூறியுள்ளார். இதனால் பாஜகவில் குழப்ப நிலை நீடிக்கிறது. மேலும், பிரதமர் வேட்பாளராக மோடிதான் முன் நிறுத்தப்படுவார் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மோடிக்கும் பாஜக நிர்வாகியின் கருத்து கலக்கத்தை உண்டு பண்ணி இருப்பதாகவும் தெரிய வருகிறது.




0 Responses to பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜகவில் குழப்பம்! : அத்வானி முன் நிறுத்தப்படுவாரா?