Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட்தற்கு நீதி கிடைக்கவில்லை. ’விடுதலை’ என்கிற ஒற்றைச் சொல்லிற்காக ஒரு தலைமுறையே அழிந்தாலும் எதிரிகளை விடப்போவதில்லை, பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என தமிழீழ தமிழர்கள் போர் புரிந்து மடிந்தார்கள்.

இதோ இந்த தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் இலங்கையில் நாம் வேடிக்கை பார்க்க பார்க்க வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் நம் உறவுகள்.

தமிழீழம் என்கிற தனது நாட்டினை இலங்கையின் பிடியிலிருந்து விடுவிக்காமல் ஓயமாட்டோம் என்று போராடி மடிந்த தமிழர்களுக்காக 2009ல் நாம் போராடாமல் மெளனம் காத்த கொடுமை உலகில் எந்த இனத்திற்கும் நடந்து இருக்காது.
நம் வரிப்பணத்தினை வைத்து இந்தியாவும், இனவெறி கொண்ட இலங்கையும் கைகோர்த்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் துணையோடு தமிழர்கள் தனித்து விடப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள்.

தமிழநாட்டு தமிழர்களாகிய நாமும் அவர்களை கைவிட்ட பாவம் வரலாறு முழுவதும் நம்மை துரத்தும்.

இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என சொல்ல மறுக்கிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தானே தனி நாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இதை மறுக்கிறார்கள்.
1915ல் நடந்த இனப்படுகொலைக்காக 90 ஆண்டுகள் கடந்த பின்னும் ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் கூடுகிறார்கள், யூதர்கள் 60 ஆண்டு கழித்து இன்றும் தங்களது வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.

உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர் கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி தமிழினப் படுகொலையை மறக்க மாட்டோம், தமிழீழ விடுதலையை வெல்வோம் என உறுதி மொழியேற்போம்.

நம் சந்ததிகள் இனப்படுகொலையை மறக்காமல் இருக்க வருடம் தோறும் நினைவேந்தலுக்கு சாதி, மத, கட்சி பேதமின்றி லட்சக்கணக்காய் தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.

மே 17 இயக்கம்

0 Responses to மே 19ல் சென்னை மெரினாவில் தமிழனப் படுகொ​லை நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com