முலாயம் சிங் யாதவின், சமாஜ்வாதிக்கட்சி எம்பியாக இருக்கும் நடிகை ஜெயப்பிரதா, தற்போது ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு என் தி ராமாராவ் அழைப்பின் பேரில் ஆந்திர அரசியலில் தெலுங்குதேசம் கட்சியின் மூலம் களம் இறங்கினார். பின்னர் 2004 ம் ஆம் ஆண்டு, சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தார். இதுவரை சமாஜ்வாதிக்கட்சியில் இருந்த அவர் இப்போது, ஆந்திராவின் ஒய் எஸ் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகன்மோகன் ரெட்டியின், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலின் போது, ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட போவதாகவும் ஜெயப்பிரதா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆந்திர அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாதிக் கட்சி எம்பியாக இருக்கும் ஜெயப்பிரதா, கூடிய விரைவில் அல்லது, மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன், சமாஜ்வாதிக் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளத்திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.




0 Responses to ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் - ஜெயப்பிரதா