Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனும் கோரிக்கயை காமன்வெல்த் அமைச்சர்கள் பரிசீலிக்க வேண்டுமென கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. அவ்வாறு நடந்தாலும் அதில் தமது நாடுகள் பங்கேற்க கூடாது எனும் கருத்தை கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதே கருத்தை இங்கிலாந்தின் சேனல் 4 ஊடகம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஊடகங்களும், தமிழின உணர்வாளர்கள், அரசியல் வாதிகளும் தொடர்ந்து  வலியுறுத்த தொடங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக, திமுக  உள்ளிட்ட முக்கிய தமிழக அரசியல் கட்சிகளும் தற்போது வலியுறுத்த தொடங்கியுள்ளன.

இந்நிலையில் 26.4.2013 அன்று லண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், ‘டெசோ’ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார்கள்.

இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது' என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to காமன்வெல்த் இலங்கையில் நடத்தக்கூடாது எனும் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com