அடுத்த வருடம் தேர்தல் வரப்போவதனால் தமிழக காங்கிரஸார் மெல்ல மெல்ல ஈழத் தமிழர்களின் நலனைப் பற்றி பேசி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன் வட இந்திய எம்.பி.க்களின் குழுவினரின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயந்தி நடராஜன் கோமாளித்தனமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதாவது மத்தியரசில் அமைச்சராக இருக்கும் ஜெயந்தி நடராஜன் நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தார்.
அதனைப் போன்றே நவரச நடிகன் ப.சிதம்பரம் அவரும் ஈழத்தமிழரின் நலனில் அக்கறையுள்ளவர் போன்று நடித்துவருகிறார். இவர்களைப் போன்றே தமிழக காங்கிரஸாரும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகுந்த அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்து பொய்ப்பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ப.சிதம்பரத்திற்கும், ஜெயந்தி நடராஜனுக்கும் மற்றும் தமிழிக காங்கிரஸாருக்கும் தேர்தல் நெருங்குவதனால் இவர்களுக்கு தற்போது போலி ஞானம் ஏற்பட்டுள்ளது.
அன்று இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது சிங்கள அரசு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டோம் (தமிழினத்தை அழித்துவிட்டோம்) என்ற நல்ல செய்தியைக் கேட்க காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று வட இந்திய ஊடகத்திற்கு கூறியவர்தான் ப.சிதம்பரம்.
சில நாட்களுக்கு முன் ப.சிதம்பரம் கூறுகிறார் ஈழத்தமிழர் விடயத்தில் விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம் என்று ராஜீவ் காந்தியைப் பற்றி கூறுகிறார். நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மையை மறைக்க முடியுமா? அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மைகளை மறைக்கமுடியுமா? தமிழர்களின் உயிர்களை துச்சமாக கருதிவிடமுடியுமா? தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்று நம்பிக்கையினால் ஆயுதங்களை ஒப்படைக்க ராஜீவ் காந்தியின் உயிரை விட விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் கருதப்பட்ட நிராயுத பாணிகளாக இருந்த போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்திருந்தார் ராஜீவ் காந்தி. தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாக கருதினார் ராஜீவ் காந்தி. என்னமோ ராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நன்மைகள் பல கோடி செய்த ஒரு உத்தமரை இழந்துவிட்டோம் என்று கூறுகிறார் போல ப.சிதம்பரம். இவர்கள் கூறுவதனைப் பார்க்கும் போது சோனியா காந்தியை விட ராஜீவ் காந்தி தான் சிதம்பரம் போன்றவர்களுக்கும் தமிழக காங்கிரஸாருக்கும் அதிகமாக எழும்புத் துண்டுகளைப் போட்டு வந்திருக்கிறார் போலவும் அவரைப் போன்று சோனியா காந்தி எழும்புத் துண்டுகளை அதிகமாகப் போடவில்லை என்ற ஆதங்கத்தினால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள் போல?
ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார். இது மானமுள்ள, முதுகெலுப்புள்ள, ஆண்மையுள்ள மறத்தமிழனின் பேச்சாகும்.
ஈழத்தில் நடந்து முடிந்த யுத்ததினைப் பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேசு வேண்டும்? தற்போது உள்ள ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் பேசுங்கள் என்று கே.எஸ் அழகிரி முதல் தமிழக காகிரஸில் உள்ள அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது சிங்களப் போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றி மீண்டும் அவர்கள் ஈழத்தில் மீதமுள்ள தமிழ் மக்களையும் இனவழிப்புச் செய்வதற்காக இவ்வாறு தமிழக காங்கிரஸார் கருத்துக்களைக் கூறிவருகிறார்கள். ஆனால் நடந்து முடிந்த ராஜீவ் காந்தியின் கொலையை மட்டும் இவர்கள் மறக்காமல் மீண்டும், மீண்டும் பேசி ஈழத்தில் காங்கிரஸ் அரசின் துணையுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், ராஜீவ் காந்தி என்ற விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம், புலிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்று கூறி தமிழகத்தில் வாக்குகளைப் பெறமுடியாத நிலமை தற்போது உருவாகியிருக்கிறது என்று உண்மையை காங்கிரஸார் உணரவேண்டும். புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்படுபவர்களை உள்ளே தூக்கிப்போடுகிற காலமும் முடிவடைந்துவிட்டது என்பதை காங்கிரஸார் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் காங்கிரஸார் பெட்டியினுள் பற்கள் புடுங்கப்பட்ட பாம்புகளாக சுறுண்டு கிடைக்கிறார்கள், தமிழக காங்கிரஸாரும் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்பட்டால் தான் தமிழக அரசியலில் காலூன்றி நிற்கமுடியும் என்ற நிலமை உருவாகியிருக்கிறது.
தமிழக காங்கிரஸார் தமிழகத்தில் உள்ள மக்களிடம் அரசியல் பிழைப்பிற்காக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சிங்கள அரசைக் கண்டிப்பது போன்று பல நாடகங்ளை அரங்கேற்றி வருகிறார்கள் ஆனால் இந்திய பாராளுமன்றத்திலும், மக்கள் அவையிலும் சிங்களப் பேரினவாதிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஆதரித்து வருகிறார்கள். ஈழத்தமிழர் தொடர்பாக தமிழக காங்கிரஸார் கூறும் விடயங்களை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசினால் ஒருபோதும் கூறப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
உண்மையைக் கூறுவது என்றால் காங்கிரஸ் வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுவதற்காக செலுத்தப்படும் வைப்புத் தொகை இழக்காமல் இருப்பதற்காக.
விஸ்வா




0 Responses to ராஜீவ் காந்தியின் கொலையினைக் கூறி இனி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும் - விஸ்வா