தென்னிந்திய திரைப்பட துறையினர் அண்மையில் நடத்திய உண்ணாவிரதம், மற்றும் தமிழகத்தின் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களின் புறக்கணிப்பு என்பவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கை திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இணைந்து கொழும்பில் விசேட பூஜை கவனயீர்ப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 11ம் திகதி இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவதில்லை எனவும் அன்றைய தினம் அனைவரும் வெள்ளை உடை அணிந்து பூஜை வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.




0 Responses to தென்னிந்திய திரை நடிகர்களுக்கு பதிலடி : கொழும்பில் திரைப்பட நடிகர்கள் பூஜை