Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


புனேவில் 9 பேரை பேருந்தில் ஓட்டிக்கொன்ற நபருக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு புனே மாநகர பேருந்து ஓட்டுனரகாக இருந்த சந்தோஷ் மனோ என்பவர், பிப்ரவரி 3ம் திகதி கண்முடித்தனமாக பேருந்தை ஓட்டியதில் 9 பேர் பலியானார்கள். 30 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை முடிவடைந்த நிலையில் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அவ்விபத்தின் போது இவர் வாகனங்களை நிறுத்த முன்னர் 40 வாகனங்களை சேதப்படுத்தி இருந்ததுடன்,  27 பேரை காயப்படுத்தியுள்ளார்.

அரிதிலும் அரிதான' வகைக்குள் இவரது குற்றப் பின்னணி அடங்குவதாக வழக்கு விசாரணையின்போது அரசதரப்பு வழக்குரைஞர் வாதிட்டிருந்தார்.

பேருந்து ஓட்டுநகருக்கு மனநிலை குழப்பம் இருந்தது என்று அவரது வழக்குரைஞர் வாதிட்டதை, அவர் 'புத்திசுவாதீனமற்று இருந்தார்' என்று கருதமுடியாது என்ற அடிப்படையில் நீதிபதி ஏற்கமறுத்துவிட்டார்.

0 Responses to 9 பேரை பேருந்தில் ஓட்டிக்கொன்ற நபருக்கு புனேவில் தூக்குத்தண்டனை விதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com