Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா என்பது சென்னையோ, தமிழ்நாடோ மட்டுமல்ல எனவும், அரசியல் காரணமாக விளையாட்டுக்கு பாதிப்போ, தடைகளோ ஏற்படக்கூடாது எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சன் ரைசர்ஸ் அணியின் தற்போதைய தலைவருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியே தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை இரு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அல்ல எனவும், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடையை முழுத் தமிழ் நாடும் ஏற்றுக்கொள்கிறதா என்பதை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது இலங்கை வீரர்களுக்கு கஷ்டமான தருணம். ஆனால் சென்னை, தமிழ்நாட்டை விட இந்தியாவின் பிற மாநிலங்களில் இலங்கை வீரர்களுக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இம்முறை சன்ரைசர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா மற்றும் டேல் ஸ்டைன் ஆகியோரின் துணையுடன் நிச்சயம் மற்ற அணிகளுக்கு சவாலாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்தியாவின் பிற மாநிலங்களில் எமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன் - குமார் சங்ககார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com