சோதனைக் குழாய் குழந்தையின் முன்னோடியான பிரிட்டன் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் நேற்று உடல் நலக் குறைவினால் காலமானார்.
87 வயதான ராபர்ட் டாக்டர் பாட்ரிக் ஸ்டெப்டோவிடன் சேர்ந்து 1978ஆம் ஆண்டு சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் முறையை கண்டுபிடித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்த போதும் கத்தோலிக்க ஆலயங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. பின் அவர்களை சமாதானப்படுத்தினார். லூயிஸ் பிரவுன் எனும் பெண்ணே உலகின் முதல் சோதனைக் குழாய் மூலம் 1978ஆம் ஆண்டு பிறந்த குழந்தை ஆகும்.
இவரின் கண்டுபிடிப்புக்கு கடந்த 2010ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று உலகில் கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Responses to பிரபல விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் காலமானார்