Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழகத்தில் அகதிகளாக இருந்த இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இன்றி, இனி இந்தியாவை நம்பி பிரயோஜனமில்லை என நினைத்து, பிழைப்பு தேடி ஆஸ்த்ரேலியாவுக்கு போவதற்காக வேளாங்கன்னியிலிருந்து ஓட்டைப்படகு ஒன்றில் கடந்த 7ம் தேதி 120 பேர் சென்றனர். அவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகி தத்தளித்த நிலையில் தமிழக கடலோர காவல்படையினர் அவர்களை காப்பாற்றி, கைது செய்தனர். இவர்களை 10.04.2013 புதன்கிழமை நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கடந்த 6ம் தேதி இரவு ஆண்கள் 78 பேர், பெண்கள் 20 பேர், சிறுவர்கள் 12 பேர் என மொத்தம் 120 பேர் வேளாங்கன்னியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு போவதற்காக 25 பேர் கூட போகமுடியாத படகு ஒன்றில் நபர் ஒன்றுக்கு லட்ச ரூபாய் கொடுத்து உயிரை துச்சமாக நினைத்து சென்றனர். அவர்கள் சென்ற படகு பாதியில் பழுதாகி போக அதை சொல்லாமல் படுகு ஓட்டுனர் தண்ணியில் குதித்து தப்பி விட்டார்.

தத்தளித்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் வேறுவழியின்றி கடலோரக்காவல்படையினரின் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். இந்த நிலையில் அவசரமாக சென்ற கடலோரக்காவல் படை அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாதநிலையில் ஆண்கள் 75 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தான் 10ம் தேதி மீண்டும் நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு அவர்கள் ஆஜர் ஆக வந்தனர். இவர்களை தமிழ் உணர்வாளர்கள் யாரையும் நெருங்க விடாமல் பத்திரமாக பாதுகாப்போடு அழைத்து வந்து ஆஜர் படுத்தினர்.


செய்தி, படங்கள்: க.செல்வகுமார்.

0 Responses to வேளாங்கன்னியிலிருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கை தமிழர்கள் கோர்ட்டில் ஆஜர் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com