கிழக்கினில் துரோகங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகளான
பிரதி அமைச்சர் கருணாவிற்கும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்
பிள்ளையானுக்கும் இடையில் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.தற்போது மகிந்த அரசியலிலிருந்து இருவரும் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையினில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் வான் வண்டி ஒன்றிற்குள் குறித்த இருவரும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இரண்டு தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

0 Responses to கருணா - பிள்ளையான் சந்திப்பு - மகிந்த அரசு கைவிட்டதன் விளைவு!